Posts

Showing posts from April, 2022

67. சீஸன் (ஒரு பக்கக் கதை)

Image
                            67. சீஸன்                                       - ஜூனியர் தேஜ் கதிர்ஸ் (1-15-மே- 2022)       “த லை பாரமா இருக்கு டாக்டர்..! ” டாக்டர் நரசிம்மன் 3 நாட்களுக்கு மருந்து மாத்திரை எழுதித் கொடுத்தார். “தலை பாரம், கோல்டு, ரன்னிங் நோஸ்... என நிறைய பேஷண்ட்டுகள் வந்தார்கள். எல்லா பேஷண்டுகளுக்கும் 3 நாளைக்கு ‘ஆன்டிபயாடி ’ க்கும் ‘சிரப் ’ பும் எழுதினார். இந்த சீசன்ல இது எல்லாருக்கும் வரும்தான். சரியாயிரும் போங்க. ” என்று ஆறுதலும் கூறினார் டாக்டர் நரசிம்மன்.   க் ளீனிக்கை பூட்டிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்.  ‘ஹச்...! ’ என்ற தும்மலுடன் மூக்கை உறிஞ்சிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்த டாக்டர் நரசிம்மன் உடை மாற்றிக்கொண்டு வந்தார். “நரசிம்மா.. இங்கே வந்து உட்காரு ’’ ...

66. கோச் (ஒரு பக்கக் கதை)

Image
66. கோச்                     - ஜூனியர் தேஜ் கதிர்ஸ் – (1-15 மே 2022)       'ஷா ர்ட்ஸுடன்' தான் செய்யும்   உடற்பயிற்சியை, மொட்டை மாடியில் நின்று   கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் எதிர் வீட்டு வில்லனைக் கண்டு ஹரிணி அதிர்ச்சி அடைந்தாள்.   ‘ச்சீ   !   பொறுக்கிப் பயலே, என் புருஷனிடம் சொல்லி உனக்கு வைக்கிறேண்டா ஆப்பு..!'   கருவிக் கொண்டே ஹரிணி கீழே இறங்கி வந்தபோது காலிங்பெல் ஒலித்தது .   ‘யாராக இருக்கம் ’ யோசித்தபடியே திறந்தவளுக்கு மீண்டும் அதிர்ச்சி.     மொட்டை மாடியில் பார்த்த அதே முகம், இப்போது எதிரில், மிக அருகில்.   "மேடம்.. என் பெயர் ஹரன். எதிர் வீட்டுக்குக் குடி வந்து ஒரு வாரம் ஆகுது."     " ....." பதில் பேசாமல் 'சுள்' என முகத்தை வைத்துக்கொண்டு, மௌனம் காத்தாள் ஹரிணி.   "மேடம்...! ஒரு வாரமா உங்க உடற்பயிற்சியை பார்த்துப் பார்த்து , தானும் செய்யணும்னு ஆசை படுறா என் மனைவி. அவளுக்கு நீங்க முறையா உடற்பயிற்சி ...

65. விவசாயி (ஒரு பக்கக் கதை)

Image
விவசாயி (ஒபக)                                       - ஜூனியர் தேஜ் கதிர்ஸ் – (1-15 மே 2022)       வை த்திலிங்கம் ஒரு சிறு விவசாயி . கடன் , கைமாற்று , என வாங்கிச் சாகுபடி செய்த நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது . " முன்னேரத்துலயே வந்து வேலையை முடிச்சிக் கொடுங்களேன் புண்ணியமாப் போவும் ..?" அறுவடை மெஷின் அன்னங்காரிடம் கெஞ்சுவது போலக் கேட்டார் . " சொல்றீங்க ! காலையில ஏழு மணிக்கெல்லாம் வந்துடுறேன் ...  ‘ மேலே சேர்த்துப் போட்டு கொடுங்க …. ய்யா ! "  தலை சொரிந்தார் அன்னங்கார் . ச ரியாக ஒன்றரை மணி நேரத்தில் அறுவடை முடிந்து நெல்லும் வைக்கோலும் பிரிந்துவிட்டது . இரண்டு மணி   நேரத்துக்கான கூலியை பெற்றுக் கொண்டு இடத்தைக் காலி செய்துவிட்டார் அன்னங்கார் . மண்டையைப் பிளக்கும் வெயில் . களத்தில் நெல்லைத் திராவிக் காய வைத்துவ...

64. உயர்ந்த மனிதர்கள் (சிறுகதை)

Image
    64. உயர்ந்த மனிதர்கள்                                       - ஜூனியர் தேஜ்... ஆனந்த விகடன் 28.04.2022 “ அ ப்பாவோடு கோவிலுக்குப் போய்வந்த கையோடு பாடப்  புத்தகங்களை வைத்துக்கொண்டு போர்ட்டிகோவில் உட்கார்ந்தான் மகேஷ்... ” அவனுக்கு படிப்பில் கவனம் செல்லவில்லை. ‘கோவிலில் , அப்பாவிடம் கோவில் குருக்கள் சொன்னதே மனதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. அவர் ஏன் அப்படிச் சொன்னார்? ’ என்பதைச் சிந்தித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான் அவன். “கு ருக்களண்ணா...! ” “வாங்கோ...! வாங்கோ...! ஏதும் விசேஷமா...! ” “ம்...! வர்ற வாரம் எனக்கு ஜன்ம நக்‌ஷத்ரம் வருது. ஸ்வாமி அம்பாளுக்கு ஒரு அபிஷேகம் பண்ணலாம்னு...! ” “பேஷா...! பண்ணிட்டாப் போறது...! ” சொல்லிக்கொண்டே உள்ளே எழுந்து சென்றார். கர்பக் கிருஹத்தில் கற்பூர ஆரத்தி காட்டினார். அப்பா பத்து ரூபாய் நாணயம் ஒன்றை மகேஷ் கையில் கொடுத்து தட்டில் போடச் சொன்...