67. சீஸன் (ஒரு பக்கக் கதை)

                            67. சீஸன்

                                      -ஜூனியர் தேஜ்

கதிர்ஸ் (1-15-மே- 2022)

      “தலை பாரமா இருக்கு டாக்டர்..!

டாக்டர் நரசிம்மன் 3 நாட்களுக்கு மருந்து மாத்திரை எழுதித் கொடுத்தார்.

“தலை பாரம், கோல்டு, ரன்னிங் நோஸ்... என நிறைய பேஷண்ட்டுகள் வந்தார்கள்.

எல்லா பேஷண்டுகளுக்கும் 3 நாளைக்கு ‘ஆன்டிபயாடிக்கும் ‘சிரப் பும் எழுதினார்.

இந்த சீசன்ல இது எல்லாருக்கும் வரும்தான். சரியாயிரும் போங்க. என்று ஆறுதலும் கூறினார் டாக்டர் நரசிம்மன்.

 க்ளீனிக்கை பூட்டிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்.

 ‘ஹச்...!என்ற தும்மலுடன் மூக்கை உறிஞ்சிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்த டாக்டர் நரசிம்மன் உடை மாற்றிக்கொண்டு வந்தார்.

“நரசிம்மா.. இங்கே வந்து உட்காரு’’

பாட்டி அழைத்ததும் சென்றார். சொன்ன இடத்தில் உட்கார்ந்தார் நரசிம்மன்

நொச்சி, ஆடாதொடை, தும்பை, துளசி, வெற்றிலை, தூதுவளை, என பல்வேறு மூலிகைகளைப் போட்டு பாட்டி தயாராக வைத்திருந்த கொதிக்கம் நீரில் போர்வையை போர்த்திக்கொண்டு ஆவிபிடித்தபின், அம்மா கொடுத்த கஷாயத்தையும் குடித்துவிட்டு, ஓய்வெடுத்தார்.

 


Comments

  1. ஆங்கில மருந்துகள் கடுமையான விலையேற்றம்!
    பாட்டி வைத்தியம் என்பது வீட்டிலேயே சுலபமாய் செய்திடலாம்!

    ஆனால் இதுபோன்ற பாட்டி வைத்திய முறைகள் அழிந்துகொண்டு வருவது கொடுமை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

124. போதிமரம் (சிறுகதை)

139. புது வருஷப் பரிசு - சிறுகதை