58. கேள்வி பதில் (ஜூனியர் தேஜ்)
58. கேள்வி பதில்
-ஜூனியர் தேஜ்
கலையருவி (சிற்றிதழ்) மார்ச் 1997
கேள்வி பதில்
-ஜூனியர் தேஜ்
கலையருவி (சிற்றிதழ்) மார்ச் 1997
* கேள்வி :- ஹைகூ கவிதைபோல ஒரு ஹைக்கூ ஜோக் ப்ளீஸ்..
க. ராமமூர்த்தி, சென்னை - 78
** பதில் :- ரிஷி’கேசம்’ இருப்பதெங்கே..?
ஹி...
ஹி...
‘ரிஷியின் தலையில்’
*****************************************************************************
கேள்வி :- பொன்விழா சுதந்திரம் கொண்டாடும் வேளையில் அரசியல்வதிகளால் (நம்) நாடு கண்டதென்ன?
மு.முத்து, முசிறி
* பதில் :- சின்னத் திரைகளில் ‘பொன் (ரெய்டு) விழா மறு ஒளிபரப்புக் கூட
செய்தார்களே....?பார்க்கவேயில்லையா..?
*****************************************************************************
* கேள்வி :- ‘ஜாதி வெறி', ‘மத வெறி' – விஷம் நிறைந்தது எது?
சாணக்யா, சேலம்
* பதில் :- எரிகிற கொள்ளீல எந்தக் கொள்ளி நல்லக் கொள்ளி...?
*****************************************************************************
* கேள்வி :- ‘நகைச்சுவை நதியே...!
காதல் பற்றி தங்கள் கருத்து....
சிவா, சிவகாசி
* பதில் :- காதல் ஒரு ‘ஜீவ நதி’, ட்ரிப்யூனலுக்கெல்லாம்’
அப்பாற்பட்டது.
*****************************************************************************
* கேள்வி :- நகைச்சுவை எழுத்தாளர்கள், நடிகர், நடிகைகளில்
தங்களைக் கவர்ந்தவர்....
அ. ரம்யா, திருச்சி
* பதில் :- பாக்கியம் ராமசாமி, குணச்சித்திர சிவாஜி கணேசன், நகைச்சுவை
நாகேஷ், மனோரமா.
*****************************************************************************
* கேள்வி :- ‘ஜூனியர் தேஜ்’? என்பதுதான் உங்கள் பெயரேவா?
ஆனந்த், உசிலை
* பதில் :- ‘தேஜ்’ என்பது என் தந்தையின் புனைப்பெயர்.
புண்யாகவசனம் செய்து, நெல் பரப்பி எழுதிய எனது பெயர்தான் காஞ்சீபுரம்
பெருமாளுக்கும்..
*****************************************************************************
* கேள்வி :- காஷ்மீர் பிரச்சனை, காவிரிப் பிரச்சனை தீர வழி?
கே. பிரகாஷ், புதுக்கோட்டை
* பதில் :- இந்தப் பிரச்சனைங்க தீர்ந்துட்டா அரசியல் நடத்தறது
எப்படிங்க?
*****************************************************************************
* கேள்வி :- பணம் பாதாளம் வரை பாயும் என்றால் விதி எது வரை
பாயும்?
பார்த்திபன், கரூர்
* பதில் :- மதி விழித்துக்கொள்ளும் தூரம் வரை.
*****************************************************************************
* கேள்வி :- தற்கால ஜோக்ஸ் குறித்து தங்கள் கருத்து?
க. சின்னதுரை, திருமங்கலம்
* பதில் :- தரமான ஜோக்ஸ் தற்போது தாரளமாகவே வெளிவருகின்றன.
*****************************************************************************
* கேள்வி :- டி என் சேஷன் அடுத்த ஜனாதிபதி ஆனால்...?
த. அமுதம், அல்லிநகரம்
* பதில் :- ஜனாதிபதிக்கு உண்மையாக என்ன அதிகாரம் என்று கட்டாயம் தெரிந்துவிடும்.
*****************************************************************************
* கேள்வி :- தமிழ் நாட்டிலிருந்து 39 எம் பிக்கள் பாராளுமன்றம்
சென்றும், ‘வை கோ’ போல வாதாட ஒருவரும் இல்லையே எனும்போது என்ன தோன்றுகிறது?
எம். சின்னக்கனி, சித்தூர்
* பதில் :- ‘துருவன்’ கதைதான் நினைவுக்கு வருகிறது.
*****************************************************************************
* கேள்வி :- வயதுக்கு மீறி புத்தகங்களைச் சுமக்கும் குழந்தைகளைப்
பற்றி...
நா. லோகநாதன், திருத்தக்கல்
பதில் :- பாவம்...பூ’வின் முதுகில் (த,ஆ,க,அ,(ச.அ) எனும் பஞ்ச பூதங்கள்.
*****************************************************************************
கேள்விகள் சிறப்பு!
ReplyDeleteபதில்கள் சுவை!!