42. புரட்சி தலைவர் எம் ஜி ஆர் (கட்டுரை)
42. புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்
-ஜூனியர் தேஜ்
(ஆதிரை ஜனவரி 16-22, 2022)
இலங்கை
நாவலப்பிட்டி என்ற பகுதியில் கோபால மேனன் சத்யபாமாவுக்கு 1917ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 17ம் தேதி உதித்து, கலை அரசியல் என்னும் இரு துருவங்களிலும்
ஒளி விட்டுப் பிரகாசித்து பாரத ரத்னா எனும் உயரிய விருதுக்குப் பெருமை சேர்த்த பெருந்தகைதான்
மருதூர் ‘கோபாலமேனன் இராமச்சந்திரன்’ என்ற இயற்பெயர்
கொண்ட
எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம்.
சதி லீலாவதி என்ற திரைப்படத்தில்
1936ம் ஆண்டு அறிமுகமானவர்தான் புரட்சித் தலைவர் என்று பாசமாக அழைக்கப்படும் எம்.ஜி.ஆர்.
ஒரு
நடிகராக சினிமா ‘ஷூட்டிங்’ கை மட்டும் எதிர்கொண்டவர் அல்ல.. எம் ஜி ஆர். புரட்சி நடிகராக
துப்பாக்கி ‘ஷூட்டிங்’ கையும் எதிர் கொண்டவர்.
‘இந்த பஸ் தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்' எனப் பேச வேண்டிய வசனத்தின்
இறுதிப் பாகத்தை மாற்றி.
‘.இந்த
பஸ் தொழிலாளர்களின் உதயசூரியன்' என எம்.ஜி.ஆர் மாற்றிப் பேச. ‘சினிமாவுக்குள் கட்சி சின்னத்தைக் கொண்டு வந்ததால் ஏற்பட்ட பகை முற்றி, துப்பாக்கிச் சூட்டில்
முடிந்தது என்றும் ஒரு கருத்துண்டு.
1967ம் ஆண்டு
ஜனவரி மாதம் 12ம் தேதி எம்ஜிஆரின் மேல் நடந்த துப்பாக்கிச் சூடுதான் எம் ஜி ஆரின் அரசியல்
பிரவேசத்தைப் உலகிற்குப் பிரகடனம் செய்த நாள்
என்ற கருத்தும் நிலவுகிறது.
" என் முகத்துக்கு நேராகப் பாய்ந்துவந்த துப்பாக்கிச் சூட்டிலிருந்து
நான் எப்படிப் பிழைத்தேன்?"
என ஆச்சர்யத்தோடு கேட்டாராம் எம்.ஜி.ஆர்.
“துப்பாக்கி ரவையின் மேல் இருக்கும் காட்ரிஜ் சுற்று பிடிமானம் தளர்ந்து போய்விட்டது.” என்று காரணம் சொன்னாராம் தடயவியல் நிபுணர் சந்திரசேகரனிடம்.
எம் ஜி ஆர் முன்
தளர்ந்து போனது வேறும் துப்பாக்கி ரவை காட்ரிஜ் மட்டும்தானா என்ன?
1936ல் இருந்து தொடங்கி136 சினிமாக்களில் நடித்து 1977ல் முடித்துக் கொண்டார்.
1971 ஆம் ஆண்டு
12 தியேட்டர்களில் 150 நாட்கள் ஓடிய சத்யா
மூவிஸின் ‘ரிக்ஷாக்காரன்’ நடிப்பிற்காக மத்திய
அரசு சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ என்ற விருதை அளித்து கௌரவித்தது.
மக்கள் திலகத்தின் கடைசியாக சினிமாவில் கலைச் சேவையாற்றிய படம் ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’.
மதுரையை மீட்டபிறகு சுந்தரபாண்டியன் எதையெல்லாம்
மீட்டார்... என்பதை தமிழகம் மட்டுமல்ல உலகமே அறியும்.
1972-ம் ஆண்டு அரசியலில் இறங்கி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி மக்களுக்காக உழைக்கத் தொடங்கினார். தமிழக மக்கள் இன்றும் கடவுளுக்கு அடுத்தபடியாக எம்.ஜி.ஆரை வணங்கி வருவது சரித்திரம்.
அரசியல்
காரணங்களால் திமுக வில் இருந்து நீக்கப்பட்ட எம் ஜி ஆர், ‘நான்தான் உண்மையான திமுக’
என்று வழக்காடுவோரா..என்று அரசியல் நோக்கர்கள கருதிய நேரத்தில்
கருப்பு
சிகப்புக் கொடியின் நடுவில் அறிஞர் அண்ணாவின் உருவம் பொரித்த கொடியை நிறுவி, 1972 ஆம்
ஆண்டு அக்டோபர் 18 ல், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) என்ற கட்சியைத் தொடங்கி
) நிறுவிய 13 நாட்களில் தமிழகம் முழுதும் 6 லட்சம் கிளைகளை நிறுவி அரசியல் களத்தில்
வாழ்வாங்கு வாழ்ந்தார்,
எம் ஜி
ஆர் மீது உள்ள பற்றினால் இயக்குநர் பாக்கியராஜ் அவர்கள் எம்ஜிஆர் அவர்களின் நிலையை
படம் எடுத்துக் காட்டி தமிழக மக்களின் மத்தியில் நிலவி வந்த பற்பல ஐயங்களைப் போக்கியதால் ‘அமெரிக்காவில் படுத்துக் கொண்டே தமிழகத்தில் ஜெயித்த
எம் ஜி ஆர் என்னும் மூன்றெழுத்து மந்திரம் எக்காலத்திலும் மக்கள் மனதிலும் எண்ணங்களிலும்
என்றென்றும் ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை.
*********************
Comments
Post a Comment