47. மாற்றம் (ஒரு பக்கக் கதை)
47. மாற்றம்
-ஜூனியர் தேஜ்
மார்ச் 01 - 15 2022 கதிர்ஸ்
மகாத்மா காந்தி சிலை கம்பீரமாக நின்றது. சிலைக்கு எதிரே ஒரு கடை உதயமானது.
திறப்பு விழா அன்றுதான் தெரிந்தது அது ஒரு மதுக்கடை என்று.
மது அருந்திவிட்டு மகாத்மா காந்தி முன் களித்தனர் மதுப் பிரியர்கள்.
முகம் சுழித்தனர் ஊரார்.
கலெக்டருக்கு மனு போட்டார்கள்.
அரசியல் செல்வாக்கு கலெக்டரின் கைகளைக் கட்டிப் போட்டது.
மதுக் கடையை அகற்ற முடியாது என்பதை உணர்ந்தார் கலெக்டர்.
தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மகாத்மா காந்தி சிலையை வேறு இடத்திற்கு மாற்றினார்.
ஏதோ அவரால் ஆனது.
***********************
Comments
Post a Comment