9. மதி நுட்பம் (ஒரு பக்கக் கதை)

9. மதி நுட்பம்

 (கதிர்ஸ் - ஜனவரி 1 – 15 – 2021 )

      கேஷ்...! தாத்தா உன்கிட்டே பேசணுமாம்...! 

‘செல்-போனை ஊஞ்சல் பலகையில் வைத்துவிட்டு, மீண்டும் ‘சுந்தரகாண்டம் பாராயணத்தைத் தொடர்ந்தாள் பாட்டி.

சொல்லுங்க தாத்தா...! என்றான் மகேஷ்.

தாத்தா சொன்னதைக் கேட்டுக்கொண்டான்.

சரி தாத்தா... என்று சொல்லிக்கொண்டே, அங்கிருந்து ஓடினான்.

வீட்டுன் அருகாமை ‘ஜெனரல்-மெர்ச்சன்ட் கடையில் தாத்தாவுக்கு அதையும், நடைமேடையில் கடைபரத்தியப் பூக்காரம்மாவிடம் பாட்டி வழக்கமாக வாங்கும் வாடிக்கைப் பூவையும் வாங்கி வந்தான் மகேஷ்.

பாட்டிக்கான ‘ பூவை ஊஞ்சலில் வைத்தான்.

வேகமாக மாடிக்கு ஓடினான்.

மாடியில் இருந்த தாத்தா ரூமைத் திறந்தான்.

குபீரென்று அடித்தது ஏ.சி. குளிர்.

புல்-ஏசியோடு ‘ஃபேனையும் போட்டுக்கொண்டு எப்படி இருக்க முடிகிறது இந்த தாத்தாவால்?... 

இவ்வாறு நினைத்தபடியே, இந்தாங்க தாத்தா...! என்று தன் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த, முனைகள் மிருதுவான நான்கு விரல்கள் விரிந்து வளைந்தாற்போல் வடிவமைக்கப்பட்ட முதுகு சொறியும் கோலை தாத்தாவிடம் நீட்டினான் மகேஷ்.

னை ஓலை விசிறியைக் கீழிருந்துத் தேடி எடுத்து வரச் சொன்னது, ‘முதுகு சொறிவதற்குத்தான் என்பதைப் புரிந்துகொண்டு, தன் ‘பாக்கெட்-மணியைச் செலவு செய்து தக்க உபகரணம் வாங்கி வந்த மகேஷின் மதி நுட்பத்தை வியந்தார்.

 பேரனைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்தார் தாத்தா.

అఅఅఅఅఅఅఅఅ

Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)