26. ரஜினி படம் (ஒரு பக்கக் கதை)
26. ரஜினி படம்
-ஜூனியர் தேஜ்
(கதிர்ஸ் – நவம்பர்
15-30)
"தீபாவளிக்கு ரஜினி படம் பார்ப்போமா...
? " என்று கேட்டார் ஸ்ரீதரன்.
"பார்க்கலாம்..பார்க்கலாம்..."
என கோரஸ்ஸாகக் கத்தினர் எல்லோரும் மகிழ்ச்சியாக.
"குடும்ப உறுப்பினர்கள்
அனைவருக்கும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி இருந்தனர்."
வீட்டில் அம்மா
, அக்கா , தங்கை அனைவரும் சேர்ந்து வேகவேகமாக சமையலை முடித்தனர்.
குழந்தைகள் அவசர
அவசரமாக ஆன்லைன் ஹோம் ஒர்க் முடித்துவிட்டு
ரஜினி படம் பார்க்கத் தயாராகினர்.
காலா காலத்தில் அன்றைய
குரு பூஜையை முடித்தார் அப்பா.. எல்லோரும் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிட்டனர்.
சாப்பிட்டதும் ஸ்ரீதரன்
கிளம்பி வெளியே போனான்.
ஸ்ரீதரன் திரும்பி
வருவதற்குள் அனைவரும் தங்களை படம் பார்க்கத் தயார் செய்து கொண்டனர்.
ஸ்ரீதரன் வரும்போது
கையில் வாழை இலை போல் சுருட்டியபடி எதையோ எடுத்து வந்தான்.
எல்லோரையும் பார்த்து ரெடியா என்று கேட்டான் ஸ்ரீதரன்.
"ரெடீ....!!!
" என்றனர் எல்லோரும் குஷியாக... கோரஸாக...
கையில் சுருட்டிக்
கொண்டு வந்திருந்த ரஜினியின் புகைப்படத்தை காட்டி .."பாருங்க ரஜினி படம்... இதுதான்
இப்போதைக்குப் பார்க்கிற மாதிரி இருக்கு…!” என்றான் ஸ்ரீதரன்.
*************************
Comments
Post a Comment