18. எக்ஸசைஸ் (ஒரு பக்கக் கதை)
18. எக்ஸசைஸ் -ஜூனியர் தேஜ்
(கதிர்ஸ் - அக்டோபர் (1-15) 2022
“டாக்டர் பசுபதி என்கிற, பிரசித்திபெற்ற நரம்பியல் நிபுணரின் வருகைக்காக அந்த அந்த முதியோர் இல்லம் தயாராக இருந்தது.
“ரொம்ப கைராசி டாக்டராம்...!”
“நோயாளிகளை ரொம்ப அக்கரையோட கவனிப்பாராம்...!”
“அவரோட பிஸி ஷெட்யூல்ல நம்ம இல்லத்துக்கு வாரம் ஒருநாள் சேவை செய்ய வர்றது நம்ம அதிர்ஷ்டம்...!”
இல்லம் முழுதும் இதேப் பேச்சு.
டாக்டர் பசுபதி வந்தார்.
சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, கைக்கூப்பி வரவேற்ற முதியோர் இல்லத் தலைவி சுலோச்சனாவை பார்த்ததும் புருவம் உயர்த்தினார்.
டாக்டர் வருகைக்கு முன்பே வந்து, சேவைசெய்த நடமாடும் ஆய்வகம் கொடுத்த ரிப்போர்டுகளை வாங்கிப் பார்த்தார்.
‘நோ ஷுகர்...! நோ பீ பி...! நோ கொலஸ்ட்ரால்...!’
மனசுக்குள் வாங்கிக்கொண்டார்.
‘மூவ்மெண்ட்’ இல்லாமையால் சுரந்திருந்தப் பாதங்களை இரண்டு கைகளாலும் தொட்டார்.
“சீரியஸ் இஷ்யூஸ்’ இல்லை...! ‘எக்ஸசைஸே போதும்...!”
“உட்கார்ந்தபடியே கால் கட்டைவிரலால் வலதுபுறம் 25 ரவுண்டு இடது புறம் 25 ரவுண்டு போடுங்க மேடம்...!’’
“ஓகே டாக்டர்...! நான் எக்ஸசைஸ் முடிக்கறேன். அதுக்குள்ளே நீங்க லஞ்ச் முடிச்சிட்டு வந்துடுங்களேன். தயாரா இருக்கு...!’’
“நோ...! நீங்க ‘எக்ஸசைஸ்’ முடிச்சாதான், நான் சாப்பிடுவேன்...!”
“.......................”
டாக்டரை வியப்பாய்ப் பார்த்தார்கள் சுலோச்சனா உட்பட அனைவருமே.
“மேடம்...! ஓய்வு பெற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியையான நீங்க கணக்குப் பாடம் நடத்துவீங்க;
‘குறிப்பிட்ட ‘எக்ஸசைஸ்’ முடிச்சாதான் சாப்பிடுவேன்...!”னு சொல்லி முடிக்க வைப்பீங்க;
மாணவர் முன்னேற்றத்துக்காக நீங்க கடைபிடிச்ச ஸ்டைலைத்தான் உங்க மாணவனான நானும் கடைபிடிக்கறேன் டீச்சர்...!” என்றார் டாக்டர்.
అఅఅఅఅఅఅఅఅ
.jpg)
Comments
Post a Comment