21 தீபாவளி டிரஸ் (ஒரு பக்கக் கதை)

21. தீபாவளி டிரஸ்

                                      -ஜூனியர் தேஜ்

(கதிர்ஸ் – நவம்பர் 01-15 2021)


21. தீபாவளி டிரஸ்

 (கதிர்ஸ் – நவம்பர் 01-15 2021)

வம்பர் 1,2021

காத்தவராயன்  எட்டாம் வகுப்பு படிக்கிறான். அவன் தம்பி ரகு ஆறாம் வகுப்பு. இருவரும் படிப்பது அரசுப் பள்ளியில். கொரோனாவுக்குப் பிறகு பள்ளி திறந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர் இருவரும்.

நீண்ட நாட்கள் கழித்து பள்ளி வளாகத்தில் நண்பர்கள் சந்தித்துக் கொண்டார்கள்.

தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் தீபாவளி ‘டிரஸ் பற்றிய பேச்சே அதிகமாக இருந்தது.

ஆசிரியர்களும் பாடம் நடத்தி போரடிக்காமல், தீபாவளிப் பண்டிகை பற்றி உரையாடி மாணவர்களை மகிழ்ச்சியூட்டி, மகிழ்ந்தார்கள். இடையிடையே பாதுகாப்பு பற்றியும் சொல்லிக் கொடுத்தார்கள்.

புத்தகங்களை ஜூலை மாதமே கொடுத்துவிட்டதால், அரசு உத்தரவுப்படி  விலையில்லா நோட்டுகள், சீருடை போன்றவை பள்ளி திறந்த இன்றே, அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டன.

வம்பர்-2

பள்ளிக்குச் சென்றனர் காத்தவராயனையும் ரகுவும்.

அவர்களிருவரையும் அழைத்தார் தலைமையாசிரியர்.

பயந்துக்கொண்டே அவர் முன் நின்றார்கள் இருவரும்.

"நீங்க விலையில்லாச் சீருடை, வாங்கிட்டீங்க தானே?

வாங்கிட்டோம் சார்...!

“அப்ப, ஏன் புதுயூனிபார்ம்போடல?"

"கொரோனாவால வேலை போயி அப்பா அம்மா  ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க." என்றான் காத்தவராயன்.

"அதுக்கென்ன இப்ப.." என்றார் ஹெட் மாஸ்டர்.

"எங்களுக்கு தீபாவளிக்கு புதுடிரஸ்வாங்க வசதி இல்லை. அதனால இந்த யூனிபார்மை தீபாவளிக்கு வச்சிருக்கலாம்னு அப்பா அம்மா சொல்லிட்டாங்க சார்…!" என்றனர் இருவரும் கோரஸாக.

అఅఅఅఅఅఅఅఅ


Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)