12. காதல் கத்தரிக்காய் (ஒரு பக்க கதை)
12. காதல்... கத்தரிக்காய்...
ஜூனியர் தேஜ்
(கதிர்ஸ் - பிப்ரவரி - 1-15- 2021)
“ஹலோ...”
“சொல்லுங்க...! நான் எழுத்தாளர் நவீனன் பேசுறேன்...!”
“கதிர்’ஸ் நிருபர் தேன்மொழி பேசுறேன். காதலர் தின
ஸ்பெஷலுக்கு ஒரு பேட்டி எடுக்கணும்...!”
“ஓ...!
தாராளமா...!”
“எப்பக்
கூப்பிடலாம்...?”
“இப்பவே நான் ‘ஃப்ரீ’ தான்...! ‘காரை’ ஓரம் கட்டி நிறுத்திக்கறேன். நீங்க கேள்விகளைக்
கேளுங்க...!”
“காதலர் தினத்தைப்
பற்றி உங்கள் கருத்து?”
“காதலென்ற
உன்னத ‘கான்ஸப்ட்டு’க்கு உலகளவிலான அங்கீகாரம்..!”
ஒரு மணி நேரப் பேட்டியில்
காதல் குறித்து நவீனன் பேசிய ஒவ்வொன்றும் தேன்மொழிக்குப் பிரமிப்பைத் தந்தன. ஒரு முடிவுக்கு
வந்தாள்.
இதைவிடச் சிறந்த
தருணம் கிடைக்காது என்பதையறிந்து, 100 மீட்டர் இடைவெளியில் இருந்தத் தேன்மொழி, தன்
காரை விட்டிறங்கித் தனிமையிலிருந்த இளம் எழுத்தாளர் நவீனன் முன் வந்து நின்றாள்.
“நான்தான்
இத்தனை நேரமும் உங்களைப் பேட்டி எடுத்த தேன்மொழி சார்...!”
“ஓ.. அப்படியா? நைஸ் டு மீட்
யூ...!”
“காதல் ரசம் சொட்டச்சொட்ட நீங்க
எழுதிய எல்லாக் கதைகளையும் பலமுறைப் படிச்சவ நான்...! உங்களை நான் டீப்பா லவ் பண்றேன் நவீனன் ’ஐ லவ் யூ...!’ என்றாள் காதல் வழிய.
நவீனன் ரௌத்ரமானான்.
“எனக்கு எங்க
வீட்லப் பெண் பார்த்துக்கிட்டிருக்காங்க. இந்த காதல் கத்திரிக்காய்... இதெல்லாம்
எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது...! சாரி...!”
‘பளிச்’செனச் சொல்லிவிட்டுக் ‘காரை’, ‘ஸ்டார்ட்’ செய்தான் நவீனன்.
అఅఅఅఅఅఅఅఅ
Comments
Post a Comment