27. ஃபார்மல் (ஒரு பக்கக் கதை)

27. ஃபார்மல்

                      ஜூனியர் தேஜ்

கதிர்ஸ் டிசம்பர் (1-15) 2021

 

மாலை ரிசப்ஷன்.

முற்பகல் 11 மணி முதலே வெளியூர் உறவினர்கள்    வரத் தொடங்கி விட்டார்கள்.

நான்கு மணிக்கெல்லாம் கல்யாண மண்டபம் களை கட்டி விட்டது.

ஆறு மணிக்கு நிச்சயதார்த்தம் மண்டபம் நிறைந்து இருந்தது.

மணமகனும் மணமகளும் முழுக்க முழுக்க  திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களிடமும் நண்பர்களிடமும் முழுமையாகப் பேசிப் பழகினார்கள்.

          ஒவ்வொருவரையும் விருந்து உபசரித்தார்கள்.

          அவ்வப்போது நாதஸ்வர இசையை ரசித்தார்கள்.

கேட்டரிங் சமையலை சுவைத்தார்கள்.

சான்சே இல்லைஅப்படி ஒரு மைண்ட்ஃபுல்னெஸ் கப்பிள்ஸ்ஆல்வேஸ் லிவ் இன் பிரசெண்ட்.

          திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மனதார தம்பதியரை வாழ்த்தினார்கள்.

          திருமண மண்டபத்தில் இருந்து வீட்டிற்குச் சென்றதும் வீட்டிற்கு வந்து கல்யாணம் விசாரிக்க வந்தவர்களிடமும் இன்முகம் காட்டி வரவேற்றார்கள் புது மன தம்பதியர்.

திருமணம் முடிந்து நான்கு நாட்கள் கழித்து (செல் ஸ்விட்ச் ஆஃப் செய்து ஐந்து நாட்கள் கழித்துவீட்டில் ஏகாந்தமாக இருந்த மணமகனும் மணமகளும் பேசிக்கொண்டார்கள்.

          "என்னங்க..செல்போன் ஸ்விட்ச் ஆன் பண்ணிடலாமா?"

என்று கேட்டாள்  மணமகள்.

           "ஓகே டியர். நாம ஸ்விட்ச் ஆஃப் மட்டும் பண்ணலேன்னா நிறைய செலவு பண்ணி ஆசையா நேரில வந்தவர்களை மதிக்காமல் செல்போன்ல ஃபார்மலா விசாரிக்கிறவங்களோடதானே மணிக்கணக்கில் பேசி இருப்போம்."

"உண்மைதாங்க.. இந்த செல் தொல்லை இல்லாம   எல்லா உறவுகளையும் புதுப்பிக்க முடிஞ்சிதுங்கஎன்று சொன்ன மணமகள் மணமகனைத் தழுவியபடி "நாளைக்கு ஆன் பண்ணிக்கலாம் செல்லை.." என்றாள்.

*******


Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்