கனவு ஊஞ்சல் விமரிசனங்கள்
கனவு ஊஞ்சல் (விமரிசனங்கள்)
மயிலாடுதுறை ராஜசேகர்
இரண்டாவது முறையாக தங்கள் சிறுகதையை ( கனவு ஊஞ்சல்) படித்து மகிழ்ந்தேன் சார்! பிரமிக்க வைக்கிறீர்கள்! பாராட்டுகள் சார்!
**************
சுபஸ்ரீ, சென்னை
Wow beautiful varadharajan mama ezhudhi irukara.
Enakkum oonjal venum 😭😭😭
எனக்கும் ஊஞ்சல் வேணும்....😭😭😭
😀😀😀
ப.புலவேந்திரன்,
முதுகலைத் தமிழாசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி
‘கனவு ஊஞ்சல்’ சிறுகதை,
தொடக்கம் முதல், முடிவு வரை நல்ல சிந்தனைகளுக்கு விருந்தாக அமைந்துள்ளது. தொடர்புடைய
செய்திகள்,தொய்வில்லாமல் தொடர்ந்து சிறப்பாகக் கையாளப்பட்டு வந்துள்ளது. சிறுகதைக்கே
உள்ள தனித்துவத்தைக் காட்டுகிறது.
அத்துடன் கிராமத்துச் சூழலில் வாழக்கூடியவர்கள் பலருக்கும் ஊஞ்சல் என்பது மிகப்பெரிய கனவாகவே இருக்கும். அந்தக் கனவு சிறுபிராயம் முதலே அனைவர்க்கும் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்.
மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுதல், ஆலமரத்து விழுதுகளில் ஆடுதல், மாமரம்,
பலா மரம், வேப்ப மரம் என்று மரக்கிளைகளில் தாம்புக் கயிற்றால் ஊஞ்சல் கட்டி
ஆடுவது, டயர் போன்றவற்றைக் கட்டி அதில் அமர்ந்து ஆடுதல் என்பதெல்லாம் மிகப் பெரிய
மகிழ்ச்சி.
‘Looking For A Cousin On A Swing’ என்ற கவிதையில் A.K.
Ramanujan என்ற இந்திய
ஆங்கிலக் கவிஞரின் கவிதையில் சொல்வதைப் போல சின்னஞ்சிறு வயதில் ஊஞ்சலில் ஆடி மகிழும்
சுகமே சுகம்.
புது வீடு கட்டும்போது ஊஞ்சல் போட ஆசைப்படும் கதையின்
முக்கியக் கதாபாத்திரமான குமரேசனின் ஊஞ்சல் ஆசையும், அந்த எண்ணம் ஈடேராமல் போகும்போதுகூட
அவர் சிந்தனையில், மனைவியின் செயலில் இருக்கும் மற்றொரு பரிமாணத்தைக் காண்கிறார்.
இந்த இடத்தில் ‘அறிவுடையார் ஆவதறிவார்’ என்ற கருத்து
தெற்றெனப் பளிச்சிடுகிறது.
ஊஞ்சல் வாங்கும் எண்ணம் தள்ளித் தள்ளிப் போய், அது
ஈடேறும் நேரத்தில் குமரேசனுக்கு ஏற்பட்ட ஒரு விபத்து.
உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று தலைக்கு வந்ததைத் தலைப்பாகையோடு நிறுத்திய அவளின் கடமையுணர்வு, கணவர்மேல் அவளுக்கு இருந்த கரிசனம் அனைத்தையும் உணர்கிறார் குமரேசன்.
இது கதையைப் படிக்கும் வாசகர்களுக்கு மிகச் சிறப்பான
படிப்பினை.
Disability, Disease & Death இந்த மூன்றும் எந்த
நேரத்திலும் யாருக்கும் வரலாம் என்கிற முன்னோர்களின் மொழியைக் குறிப்பிட்ட இடம் மிகச்
சிறப்பு.
“A Challenge to Fate’ என்ற கவிக்குயில் சரோஜினி
நாயுடுவின் கவிதையில் வருவதைப்போல் குமரேசனின் விதியை அவர் மனைவி மதியால் வென்ற நிலையைக்
குறிப்பிட்டு, ‘பெண் புத்தி பின் புத்தி’ என்ற பின்னால் வருவதை முன்பே அறியும் பெண்களின்
தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்தி, பெண்ணீயத்தின் பெருமையைப் போற்றியுள்ளது சிறப்பினும் சிறப்பு.
யாப்பிலக்கணம் கூறும், குறளடி, சிந்தடி, அளவடி,
நெடிலடி, கழிநெடிலடியையும் கதையுடன் கலந்துள்ளது போற்றுதற்குறியது.
சிந்தடி என்கிற மூன்றடியை ஊஞ்சலில் பொருத்தியதைக் கண்டு வியந்து போகிறேன்.
என்னைப் போல தமிழார்வலர்களுக்கு இது விருந்தாக அமைகிறது.
ஆங்கில இலக்கியம் படித்த தாங்கள், கதையில் தமிழ்ப் புனைக்கதையின் பல்வேறு கூறுகளையும், சிறப்பாகக் கையாண்டிருப்பது ஒரு அற்புதம் என்பதை ஆணித்தரமாகக் கூறுவதில் பெருமகிழ்வெய்துகிறேன்.
ப புலவேந்திரன்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஆனந்த சீனிவாசன், மூத்த எழுத்தாளர்
உங்கள் மணவர், கடலூர் கணேசன் அவர்களின் விமர்சனம் மிகவும் பெருமையாக இருக்கிறது.
ஒரு ஆசிரியருக்கு.அது பாக்கியம்.
ஓரு ஆசிரியர் இப்போது தான் நிறைவு அடைகிறார்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பரணி என்கிற விஜயகாமேஸ்வரி, சென்னை
குமரேசனை போலத்தான் நாங்களும் ஊஞ்சல் கனவோடுஉள்ளோம் கதை அருமை,அதில் காணும் பழூர் ஊஞ்சல், திருவிசலூர் ஊஞ்சல் சூப்பர்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கணேசன் , பட்டதாரி ஆங்கில ஆசிரியர், அரசு உயர் பள்ளி, கடலூர்
சார் உங்கள் கதைகள் எல்லாமே அருமை. ரசித்து ருசித்துப் படிக்கிறேன்.
ஊஞ்சல் சிறுகதையை நான் என் வீட்டு ஊஞ்சலில் அமர்ந்து படித்து ரசித்துக்கொண்டிருக்கிறேன் சார்.
நீங்கள் 'Once Upon a Midnight Dreary...என்று உணர்ச்சிகரமாகத் தொடங்கி Edger Allen Poe வின், “The Raven” and “Annabel Lee”, T.S Eliot ன்The Waste Land, Shakespeare ன் Tragedies. Comedies. Histories. Paradise Lost of John Milton, Indo-Anglian writings like River by A K Ramanujan. என்று எம் ஏக்கான அனைத்துப் பாடங்களையும் வாராவாரம் சனி ஞாயிறு விடு முறை நாட்களிலும் மற்ற வெகேஷன் விடுமுறைகளிலும் பாடம் எடுத்து மனதில் பதிய வைத்த அந்த நாட்களை மறக்கவே முடியாது.
திருவிசைநல்லூரில் தண்ணீர் தொட்டியில் கழுத்தளவு தண்ணீரில் உட்கார வைத்து எனக்கும் காரைக்கால் மீனாட்சி சுந்தரத்துக்கும் TS Eliot ன் The Waste Land பாடம் எடுத்ததை உயிர் உள்ள வரை மறக்க முடியாது சார்.
தற்போது உங்கள் கதைகளைப் படிக்கும்போது, காட்சிகளுக்குப் பொறுத்தமாக நீங்கள் போடும் இமேஜ்களையும் மிகவும் ரசிக்க முடிகிறது சார்.
நீங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும். அனைத்து இலக்கியப் பரிசுகளும் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் சார்.
உங்கள் ரிடையர் மெண்ட் ஃபங்ஷன் நாளை எனக்குத் தெரிவியுங்கள் சார். வந்து உங்களிடம் வாழ்த்து பெறவேண்டும் சார்.
[1:07 PM, 6/24/2022] மயிலாடுதுறை ராஜசேகர்:
கனவு ஊஞ்சல் சிறுகதையை நேற்று இரவு படித்தேன். 'சிறுகதைன்னா அதில் ஓர் அழகு இருக்கணும்'னு நாஞ்சில் நாடன் சொல்லி இருக்கிறார்.
உங்கள் சிறுகதை சர்வ லட்சணமும் பொருந்தியதாக அற்புத படைப்பாக உள்ளது.உங்கள் கதையைப் படிக்கும் போது , எனக்கு இதேபோல் எழுத வரவில்லையே என்று உங்களைப் பார்த்து பொறாமையாக உள்ளது. கலக்கியிருக்கிறீர்கள்.பாராட்டுகள்!
வாழ்த்துகள் மேலும் மேலும் வெற்றி பெற்றிட. அன்புடன் மயிலாடுதுறை ராஜசேகர்.
unnoda kanavu unjal kathai evalavu murai padithalum salipe varathu .
ஆனந்த சீனிவாசன், மூத்த எழுத்தாளர்
உங்கள் கதை 13. 37 மணிக்குப் பதிவிட்டதை உடனே படித்தேன்.
கிராமியச் சூழ்நிலை, ஒவ்வொரு வீட்டிலும் ஊஞ்சல் ஆடிய விசயம் , என் பால்ய நாட்களிலும் நடந்ததைக் கண் முன் காண்பிக்கிறது.
ஒவ்வொரு விஷயத்திலும் ஆழ்ந்த அறிவு.
முதல் பாரவில் சொல்லி இருக்கும் விசயம் அடியேனுக்கு நடந்து வருகிறது. அது ஒரு வியாதி என்று உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
சொந்த ஊர் சீர்காழி அல்லவா. ஞானசம்பந்தர் ஞானம் தெரிகிறது.
நிற்க
கலியன் மதவு - இரண்டு அத்தியாயம் மட்டும் படித்து உள்ளேன்.
ஆழ்ந்த ஞானம். இதையெல்லாம் மேம்போக்காகக் கண்ட நான் , அதற்குள் இவ்வளவு விசயங்கள் இருப்பதைக் கண்டு ஆச்சரியமானேன்.
Vaazhuthukkal சார். ஊஞ்சல் மிக அருமை. எட்டாக்கனிக் கனவு ஒரு நாள் மெய்ப்படும்.
மனித உள் உணர்வுகளை 200 சதவீதம் காண்பிக்கிறது.
மீண்டும் ஒரு முறை பாராட்டு.
God bless you
***********
நீலா ராமரத்னம், சென்னை
[6/23, 2:00 PM] Neelaaa: Varadha kanavu unjal kadahai migavum arumai. Thirumba, thirumba padithu konday irunden
வரதா, கனவு ஊஞ்சல் கதை மிகவும் அருமை. திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டே இருந்தேன்.
என் ஊஞ்சல் கனவை அப்படியே படம்பிடித்து எழுதிவிட்டாய். குமரேசன் ஊஞ்சல் கனவுபோல நீலா அத்தையின் ஊஞ்சல் கனவும் நடக்கும் என நம்பறேன்
[6/23, 2:06 PM] Neelaaa: En unjal kanavu appadiye padam pidithu ezudhivittai. Kumaresan unjal kanavu pol Neela athai unjal kanavu nadakkum nambukiren
Comments
Post a Comment