141. நோய்த் தொற்று (ஒபக)

143. நோய் தொற்று  (ஒரு பக்கக் கதை )

ஜூனியர் தேஜ்

"அப்பா கரும்புப்பா...!" - ஆசையாகக் கேட்டாள் அஸ்வந்த்.

 "பொங்கல் பண்டிகைக்குப் படைத்தக் கரும்புத் துண்டுகளில் ஒன்றை எடுத்தார் மருத்துவர் ராஜபாண்டி. 

 குழாயடியில் வைத்துப் பலமுறைக் கழுவினார். துடைத்தார்.

கத்தியால் பட்டையை சீவி எடுத்தார்.

 கடினமான கணுப் பகுதியை நீக்கி மற்ற பகுதிகளைத் துண்டு துண்டுகளாக நறுக்கினார்.

***

"அஸ்வந்த் இங்கே வா!" என அழைத்தார்.

 அவன் கையை முதலில் அலம்பச் சொன்னார்.

 பிறகு சோப்புப் போட்டு நன்குக் கையை அலம்பிவிட்டார்.

 டைனிங் டேபிள் மேல் கரும்புத் துண்டுகளை வைத்து,    கடித்துத் துப்புவதற்கு பக்கத்தில் ஒரு பவுல் வைத்தார்.

 கரும்புத் துண்டுகளைக் கடித்துக் கடித்துச் சாற்றை உறிஞ்சிக் கொண்டு, சக்கையைத் துப்பிக் கொண்டிருந்தான் அஸ்வந்த்.

...

"ஃப்ரீ........" - நீளமாக விசில் ஓலி கேட்டது.

 

முனிசிபாலிட்டி குப்பை வண்டி வரும் பின்னே; விசில் சத்தம் கேட்கும் முன்னே.

 

"அஸ்வந்த்... சீக்கிரம் சீக்கிரம் துப்பு.."- என்றார்.

 

துப்பிய சக்கைகளை கிண்ணத்தோடு எடுத்து மற்ற குப்பைகளோடு கருப்புப் பைக்குள் போட்டார். முடிச்சிட்டார். 

குப்பைப்பையோடு மீதமிருந்த ஒருக் கரும்பு துண்டையும் கையில் எடுத்துக் கொண்டார்.

***

 இரண்டு பெண் துப்புறவுப்  பணியாளர்கள் ஆங்காங்கே வீடுகளில் இருந்து குப்பைகளை அன்னக்கூடையில் கொண்டுவந்தபடி இருந்தார்கள்.

 

குப்பை வண்டியின் ஓர் ஓரத்தில் இருந்த குப்பை மூட்டை மீது துப்புரவு பணிப்பெண்ணின் மகன்  அமர்ந்திருந்தான்.

***

குப்பை மூட்டையில் செருகி இருந்த துண்டு கரும்பை இடது கையால் உருவி எடுத்துக் கொண்டு,   குப்பை மூட்டையை  கழிவு வண்டியில் போட்டார் மருத்துவர் ராஜபாண்டி

 இடது கையில் வைத்திருந்த கரும்புத்துண்டை அந்த சிறுவன் கையில் கொடுத்தார். "தின்னு" என்றார். 

அந்த சிறுவனும் கரும்பை கடித்தான்.

***

பின்னாலேயே வந்த அஸ்வந்த் குப்பை வண்டியில் அமர்ந்திருந்தத் தன் வயதே உள்ள அந்த சிறுவனுக்கு  கரும்பை கொடுத்துத் தின்னச் சொல்வதைப் பார்த்தான். 

 கையையும் அலம்பாமல் கரும்பையும் அலம்பாமல் அவன் மட்டும் கரும்பு சாப்பிடலாமா அப்பா என்று கேட்டான் அஸ்வந்த்.

 அஸ்வந்தையும் அவனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியையும் எதிர்பார்க்காத மருத்துவர் ராஜபாண்டி உள்ளுக்குள்ளே ஒரு உறைந்து போனார்.

                                 ***



Comments

Popular posts from this blog

124. போதிமரம் (சிறுகதை)

139. புது வருஷப் பரிசு - சிறுகதை