மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)
WALL POSTER கீழ்க்கண்ட புகைப்படம் வேலூரில் ஒரு புத்தகக் கடையில் போட்டோ எடுத்து நாவலாசிரியர் திரு வெ. ராம்குமார் அனுப்பியது மாலை முரசில் வந்த விளம்பரம் முகநூல் மற்றும் புலன விமரிசனங்கள் . கவிஞர் பாரதன் - கம்பம் ஜூனியர் தேஜ் ; வித்தியாசமான பெயர் ; அவரும் வித்தியாசமானவர் ; அவர் எழுதும் கதைகளும் வித்தியாசமானவை. மனநல ஆலோசகர் என்பதாலோ என்னவோ, அவருடைய படைப்புகள் அனைத்துமே மனித மனங்களைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. “மனம் ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு – அதைத் தாவ விட்டால் தவ்வி ஓட விட்டால், நம்மைப் பாவத்தில் தள்ளிவிடும்.” என ஒரு திரைப்படப் பாடல் உண்டு. மனித மனம் நிலையற்று அலை பாய்ந்துகொண்டேயிருப்பது பல விசித்திரங்கள் நிறைந்தது. ‘மயூரி என் உயிர் நீ” என்ற இந்தக் குறுநாவல் அந்த மன விசித்திரங்களையும், அதன் நிலையற்றுத் தாவும் போக்கினையும் அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. நூலின் முதல் வரியிலேயே ‘டு ப்... டுப்... டுப்... டுப்...” சைலன்ஸர் எழுப்பிய ஓசை, புல்லாங்குழலின் இனிய நாதமாய் இழைந்து நவிஷ்னியின் செவியைக் குளிர்வித்தது.” என காதலர்களின் மன நிலையையும், போதை அடிமைகளின் ம...
Comments
Post a Comment