மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)
முகநூல் மற்றும் புலன
விமரிசனங்கள்.
கவிஞர் பாரதன் - கம்பம்
ஜூனியர்
தேஜ் ; வித்தியாசமான பெயர் ; அவரும் வித்தியாசமானவர் ; அவர் எழுதும் கதைகளும் வித்தியாசமானவை.
மனநல ஆலோசகர் என்பதாலோ என்னவோ, அவருடைய படைப்புகள் அனைத்துமே மனித மனங்களைச் சுற்றியே
அமைந்திருக்கின்றன.
“மனம்
ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு – அதைத் தாவ விட்டால் தவ்வி ஓட விட்டால், நம்மைப்
பாவத்தில் தள்ளிவிடும்.” என ஒரு திரைப்படப் பாடல் உண்டு. மனித மனம் நிலையற்று அலை பாய்ந்துகொண்டேயிருப்பது
பல விசித்திரங்கள் நிறைந்தது.
‘மயூரி
என் உயிர் நீ” என்ற இந்தக் குறுநாவல் அந்த
மன விசித்திரங்களையும், அதன் நிலையற்றுத் தாவும் போக்கினையும் அருமையாகப் படம் பிடித்துக்
காட்டுகிறது.
நூலின்
முதல் வரியிலேயே ‘டுப்... டுப்... டுப்...
டுப்...” சைலன்ஸர் எழுப்பிய ஓசை, புல்லாங்குழலின் இனிய நாதமாய் இழைந்து நவிஷ்னியின்
செவியைக் குளிர்வித்தது.” என காதலர்களின் மன நிலையையும், போதை அடிமைகளின் மன
நிலையையும் அழகாகக் காட்சிப்படுத்தி விடுகிறார் ஜூனியர் தேஜ்.
“எது நம்மை அலட்சியம்
செய்கிறதோ, அதன் மேல்தானே ஈர்ப்பு அதிகமாகும். எது வேண்டாம் என்று ஒதுக்குகிறதோ
அதைத்தானே அடைய ஆசைப்படும். அந்தக் கட்டத்தில்தான் இருந்தாள் நவிஷ்ணி.” என்று
எழுதும்போதும், “நல்ல பழக்கமோ கெட்ட பழக்கமோ தொடர்ந்து செய்யும்போது அதற்கு
அடிமையாவது மனிதன் மட்டுமல்ல, விலங்குகளும்தான். தரமற்ற நண்பர்களின்
வற்புறுத்தல்களாலும், மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்வதற்காகவும்,
இப்படி ஏதேனும் ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு, தொடக்கத்தில் கொஞ்சமாகத்தான்
போதை ஏற்றிக் கொள்கிறார்கள். நாளடைவில் அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள்.” என்று
எழுதும்பொழுது, ஜூனியர் தேஜ் குறிப்பிடுவது உளவியல் உண்மை மட்டுமல்ல, நாம் நம் கண்
முன்னால் காண்கின்ற உண்மையும் கூட.
“நங்கையர்களை நல்லவள், கெட்டவள்,
புத்திசாலி, அறிவிலி, ஆங்காரி, பாவப்பட்டவள், பலானவள் என்றெல்லாம் பிரித்துப் பிரித்து
முத்திரை குத்தி முடக்கி வைப்பதே உலகளாவிய நடைமுறை.” என்று எழுதி, பெண்ணடிமைத்தனத்திற்குச் சவுக்கடி தரும்போது
ஜூனியர் தேஜ் என்ற உளவியலாளருக்குள் ஒரு சமூகப் போராளி இருப்பதை உணர்கிறோம்.
பேராசிரியர் குஞ்சிதபாதம் என்ற
கதை மாந்தர் மூலம், சலுகைப் பருக்கைகளுக்காகத் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளும் இழி
மனிதர்களை, நம் கண் முன்பு கொண்டு வந்து நிறுத்துகிறது ஜூனியர் தேஜ் அவர்களின் எழுத்து.
“ஒரு வார்த்தையை வெட்டினால் ரத்தம்
வர வேண்டும்..” என்ற அலெக்ஸி டால்ஸ்டாயின் சொற்களை எடுத்தாளும்போதும், விவேகானந்தர்,
கண்ணன், கோபியர், குருஷேத்ரம்... என்று ஆன்மீகத்தை எடுத்துக் காட்டும்போதும் ஆசிரியரின்
பரந்துபட்ட படிப்புத் தென்படுகிறது.
“என்றென்றும் காந்தி போற்றப்படுவதற்குக்
காரணம் அவரின் தொண்டு என்பதை விட அவரின் நிலைத்த புகழுக்கு அவர் விலக்க எறிந்தத் தன்முனைப்பேக்
காரணம். இப்போதுப் புகழ் போதைக்காக பாண்ட், சூட்டுடன், பட்டுப் புடவையுடன் கையில் துடைப்பம்
பிடித்தபடி புகைப்படத்துக்குப் போஸ் கொடுக்கும் தேசத் தொண்டர்கள் இருக்கவேச் செய்கிறார்கள்.
அது போன்றவர்கள் காலத்தை வென்று நிற்பதில்லையே.”
இப்படி அவர் குறிப்பிடும்போது
பலரின் அரசியல் சாயம் வெளுக்கிறது.
போதை எதிர்ப்பையும், காதலையும்
இணைத்து, இந்தக் குறுநாவலைப் படைத்திருக்கிறார் ஜூனியர் தேஜ்.
கதையின் முடிவு முற்றிலும் எதிர்பாராதவிதமாக
இருக்கிறது.
‘சில இடங்களில் தொய்வு, ஆங்கிலச்
சொற்களின் பணன்பாடு அதிகம்.’ என மிகச்சில குறைகள் உண்டு. அவற்றையும் தாண்டி, ‘மயூரி
என் உயிர் நீ’ இன்றைய தேவையான படைப்பு.
வாழ்த்துக்களுடன்
கவிஞர் பாரதன் , கம்பம்
எப்போதும் என் உயிர் நீதான். அட்டை பட நாயகியின் கண்கள் சுண்டி இழுப்பது போல் உள்ளது ஜூனியர் தேஜ் அவர்களின் கதை படு அமர்களமாக உள்ளது Kaliappan Kalimuthu
மயூரி என் உயிர் நீ...நாவலை படித்தேன்-ரசித்து மகிழ்ந்தேன்.ஆங்கிலத்துறை பேராசிரியை மயூரி மற்றும்,எழுத்தாளர் சங்கு(மயூரியின் ஒருதலை காதல்),போதை தடுப்பு பிரிவு அதிகாரியான நவீனன் மயூரி மீது கொண்ட காதல்,போதையில் சிக்கி தவிக்கும் நவிஷ்னியை மீட்டும் மன ஆலோசகரான வரதராஜனின் பாத்திர படைப்பும் அருமை.கதை நெடிகிலும்,ஆசிரியர் தான் கற்ற-பெற்ற வாழ்வியல் அனுபவங்களை கதையோட்டத்தோடு இணைத்த விதம் அருமை..அற்புதமான காதல் மற்றும் உளவியல் கலந்து சிறப்பாக எழுதி அசத்திய திரு. ஜூனியர் தேஜ் அவர்களுக்கு எனது பாராட்டுகளும்,வாழ்த்துகளும்.
சென்ற வார கண்மணியில் முழு நீள நாவல் எழுதிய திரு வெ ராம்குமார் அவர்களின் விமர்சனம்
மயூரி என் உயிர் நீ உளவியல் சார்ந்த நாவல் மனம் போன போக்கில் வாழ்ந்தால் அது நம்மை துயரத்துக்கு கொண்டு விடும் இன்றைய தத்துவத்தை தத்துவமாக வெளிப்படுத்தி உள்ளது எழுத்தாளர் ஜூனியர் தேஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து
ReplyDeleteநேற்று தான் மயூரி என் உயிர் நீ என்கிற ஜூனியர் தேஜ் அவர்கள் எழுதிய கண்மணி நாவலை வாசித்தேன்.
ReplyDeleteமிகவும் சிறப்பான தீம். போதைப்பொருட்களை பற்றி நிறைய விஷயங்களை திரட்டி எழுதியிருக்கிறீர்கள். மனச்சிதைவு நோய் பற்றியும் நிறைய தகவல்கள்..அதே நேரத்தில் சிற்றிதழ் சிறுகதைகளின் ஆழத்தை பற்றியும் பேசுகிறது
உயர் பதவியில் இருக்கிற மனிதர்களின் விருப்பத்திற்கு சமூகம் எப்படி துணை போகிறது என்பதை கல்லூரியின் மூலம் காட்டி இருக்கிறீர்கள்.. நடையும் மிக நன்றாக இருந்தது
சிறப்பான ஒரு வாசிப்பனுபவம். இன்னும் நிறைய நிரல்களை எதிர்பார்க்கிறோம் சார். நன்றி