Posts

157. அனிச்சம் (காற்று வெளி – புரட்டாசி 2024)

Image
  157.  அனிச்சம்        (சிறுகதை)         ஜூனியர் தேஜ்                      (காற்று வெளி – புரட்டாசி 2024) த னக்கு இப்படியொரு நிலை வருமெனக் கனவிலும் நினைத்தவரில்லை குருசாமி.  இரவு, சயனத்துக்குப் போகும்போது கூட திடமாகத்தானிருந்தார்; வழக்கம்போலப் படுக்கையில் வஜ்ராசனத்தில் அமர்ந்து, கண்மூடி, கவனம் குவித்து மனம் ஒருமுகப்படுத்திக்கொண்டுதான் படுத்தார். விடிகாலை துயிலெழுந்தபோதே, தலைச்சுற்றல் தடுமாற்றம் ஏற்படுத்த, சுதாரிப்பதற்குள் தாறுமாறாய் சுவற்றில் சாய்ந்துவிட்டார்;  சற்றே சுதாரித்து, சுவற்றைத் தாங்கி எழுந்து நிற்க முயன்றபோது, மீண்டும் தலைக் கிறுகிறுக்க, கைகள் துவள, வேரற்ற மரம்போல, எக்குத்தப்பாய்ச் சாய்ந்து தரையில் விழுந்து விட்டார். சாயும்போது, இரும்புக் கட்டிலின் விளிம்பில் கொசு வலையைக் கோர்க்கப் பொருத்தப் பட்ட தகரக்குழல் பின்மண்டையைத் தாக்கிவிட்டது. ரத்தக் கசிவு கண்டதும், பயந்து அடித்துக் கொண்டு, ஏற்பாடு செய்த 108ல் கொண்டுபோன குருசாமியை, அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தார்கள்...

156. அட்சய திருதியை - (விகடகவி 24.08.2024)

Image
  அட்சய திருதியை (சிறுகதை)           (விகடகவி 24.08.2024)                                             ஜூனியர் தேஜ் அ ந்த நகரத்தில் ‘வள்ளி நகை மாளிகை ’ என்ற நகைக்கடைத் திறந்த பிறகு வந்த முதல் ‘அட்சய திருதியை ’ நாள், கடையில் கூட்டம் அலை மோதியது. ஒரு வினாடி நிற்கக் கூட நேரமின்றி, வரும் வாடிக்கையாளர்களையெல்லாம் இன்முகத்துடன் வரவேற்று, அவர்கள் தேவை அறிந்து, பம்பரமாய்ச் சுழன்று வியாபாரம் கவனித்த கடை ஊழியர்கள் ஒவ்வொருவரையும்,   பார்த்துப் பார்த்துப் பூரித்தார் கடை உரிமையாளர். புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல், தீபாவளி போன்ற சிறப்பு நாட்களில், இந்த அளவிற்குக் கூட்டம் வராது என்றாலும், ஓரளவு கூட்டம் வரும் நாட்கள்தான் அவையும். அந்த நாட்களிலும் அனைத்து ஊழியர்களும் ‘ஓவர் டைம் ’ வேலை பார்த்தால்தான் அந்தக் கூட்டத்தையேச்   சமாளிக்க முடியும். ஓவர்டைம் வேலைக்கு, பொதுவாக இரண்டு மடங்கு சம்பளம் தந்தார்கள் மற்ற கடைகளில். ஆனால், இந்த நகைக்கட...

155. மாந்த்ரீகம் - (கொலுசு - ஆகஸ்ட் 2024)

Image
  மாந்த்ரீகம் (சிறுகதை) ஜூனியர் தேஜ் (கொலுசு - ஆகஸ்ட் 2024) வி மலாதித்தனுக்குத் தேன்மொழிதான் உலகமே. சாப்பாடு, தண்ணீர் தேவையில்லை அவனுக்கு. நாள் முழுதும் அவளையேப் பார்த்துக் கொண்டு அமரச்சொன்னால், சந்தோஷமாக அதை நிறைவேற்றுவான். அவள் நின்றாலும், குனிந்தாலும், கிடந்தாலும் நடந்தாலும் அதில் ஏதோ ஒரு நாட்டிய முத்திரைப் பதிந்திருப்பதாய்த் தோன்றும் அவனுக்கு. அவளைப் பார்க்கப் பார்க்க உடலும் உள்ளமும் பரவசமடைவான். காரணம் .. காதல்… காதல் காதல் காதல்... காதல் போயின் சாதல் சாதல் சாதல்.. என்பதுதான் எத்தனை உண்மை. அதுவும் தேன்மொழியைப் போல அழகி தன் மேல் வைத்திருக்கும் காதலை நினைத்தபோது இறக்கைக் கட்டிப் பறந்தான். “தேன்மொழி... தேன்மொழி... ” என்று இருபத்திநாலு மணிநேரமும் விமலாதித்தனின் நாடி நரம்புகளெல்லாம் உச்சரித்துக்கொண்டே இருக்கும். தேன்மொழி என்ற பெயரே, மலைத்தேனாய் சுவைக்கும் அவனுக்கு. *** வ ண்டிக்காரச் சந்து இறக்கத்தில் இலக்கற்று நின்ற தருணத்தில், தேவதைபோல் எதிரில் வந்து நின்றாள் தேன்மொழி. அவனிடம் காதல் அறிவித்த கணத்திலிருந்து சரியாக நானூறு நாட்கள் தேன்மொழியின் அருகாமையில், அன்பில...

154 . வாக்கும் வக்கும் (மக்கள் குரல் 20.07.24)

Image
  154. வாக்கும் வக்கும்            -ஜூனியர் தேஜ் (மக்கள் குரல் 20.07.24) “நம்ம புஞ்சைல தலமாரி நிக்கிற ஒரு தென்ன மரத்தையும், நடு கொல்லைல நிழலடிச்சிக்கிட்டு நிக்கிற வேப்ப மரத்தையும் நீங்க கிரயத்துக்குக் கொடுக்கப்போறதா முனியன் சொன்னான்..” – மர வியாபாரி வெங்கடாசலம் பட்டும் படாமலும் கேட்டான். சில நொடிகள் அமைதிக்குப் பிறகு “குடுக்கறதுதான்.. தேவையை அனுசரிச்சி ஒண்ணோ, இல்ல ரெண்டையுமோ கொடுப்பேன். அந்நீல உமக்குச் சொல்றேனே..?” – என்றார் சரவணன். “நல்லது..” என்று கும்பிட்டுவிட்டு இடத்தைக் காலி செய்தார் வெங்கடாசலம். சரவணன் வண்டியைப் பூட்டினார். “டடக்... டடடக்...டக்...டடக்..” சீரற்ற, குண்டும் குழியுமான கிராமத்துச் சாலையில் பாரவண்டி சென்றது. சரவணன் பார வண்டியை வாகாய்க் களத்தில் நிறுத்தினார்.  நுகத்தடி தூக்கி மாடுகளை விடுவித்தார். “புஸ்... புஸ்... ஸென மூச்சு விட்டுத் தரையை மோப்பம் பார்த்து, ஆங்காங்கங்கே நீண்டு கிடந்த நுனிப்புல்களை நாக்கை நீட்டிச் சுழற்றி இழுத்துக் கடித்தது. வண்டியை முன் காலில் நிறுத்தினார். வண்டி மாடுகளை பிடித்து வந்து, புடைத்துக் கிளப்ப...

153. மனிதம் (காற்றுவெளி - ஆடி 2024)

Image
  மனிதம்   (சிறுகதை) - ஜூனியர்   தேஜ் ம ழைக்குக் கூடப் பள்ளியில் ஒதுங்காதவன் மாபாணன். பார்ப்பதற்கு கட்டு-மஸ்தாக ஆஜானுபாஹுவாக இருந்தான். அவனது இரட்டை நாடித் தோற்றத்தைக் கண்டதும் ராணுவ அதிகாரியோ என்றுதான் எவரும் எண்ணுவார்கள். பிரசவிக்கத் தயாராக இருந்தாள் அந்த நிறைமாதக் கர்பிணி பூங்குழலி. யாருமற்ற அனாதையாய், தனி மரமாய் நின்றாள் அவள். தன் தலைப் பிரசவத்தைச் சுயமாய்ப் பார்த்துக் கொள்ளத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தாள். தமிழச்சியின் அசாத்தியத் துணிவு அவளிடம் தெற்றெனப் பளிச்சிட்டது. மத, இன, மொழிவெறியின் உச்சக் கட்டமாக, ஊட்டமும் வனப்புமிக்க கர்பிணிகளைச் சின்னாபின்னமாக்கிய கடந்தகாலக் காம-வெறியாட்டத் தலைப்புச் செய்திகளெல்லாம் மனதில் ஒன்று திரண்டு அவளை மிரள வைத்தது. மிரட்சியின் விளைவாய், வியர்வை அருவியாய்க் கொட்டியது அவளுக்கு. இதயம் பன்மடங்கு அதிகமாய் ‘லப்டப் ’ பியது. அனற்புயலாய் வீசியது சுவாசம். சிங்கத்தை மிக அருகில் கண்ட புள்ளி மானாய் மிரண்டாள். எங்கு ஓடி எப்படித் தப்பிப்பதென்று யோசித்தது மனது. அனிச்சையாக பூங்குழலியின் கைகள் இரண்டும் சேர்ந்து  கூப்பிக் கொண்டது. தொழுத...